மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
491 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
491 days ago
தமிழில் அழகிய தீயே படத்திண் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். தற்போது மகன் ஓரளவு வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நவ்யா நாயர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு விழாவிற்கு வந்தவர்களிடம் விழா குறித்தும் அதில் கலந்து கொள்பவர்கள் குறித்தும் ஒரு கையேடு கொடுக்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த நவ்யா நாயர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவருக்கு ஒரு மகன் மட்டுமே இருக்கும் நிலையில் மகள் ஒருவர் இருப்பதாகவும் அவர் பெயர் யாமிகா என்றும் கூட அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். அதுமட்டுமல்ல அவர் நடிக்காத படங்களின் பெயர்களையும் அவருடைய படங்களாக பட்டியலிட்டு இருந்தார்களாம்.
இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நவ்யா நாயர், “இவர்கள் கொடுத்துள்ள விபரங்களை பார்த்துவிட்டு என் மகன் என்னிடம் எங்கே என் சகோதரி என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் ? என் வீட்டார் கேட்டால் கூட நான் என்ன சொல்வேன் ? விழாவிற்கு ஒருவரை அழைப்பவர்கள் அவர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு வாங்குவதில் என்ன சங்கடம் இருக்கிறது ? அட்லீஸ்ட் விக்கிபீடியாவை பார்த்து கூட அவர்களால் சரியான தகவல்களை எடுக்க முடியவில்லை என்றால் இதை என்னவென்று சொல்வது ?” என்று கிண்டலடிக்கும் விதமாக கூறியுள்ளார்.
491 days ago
491 days ago