ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம்
ADDED : 615 days ago
போக்கிரி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‛வில்லு'. இதில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடையவில்லை.
சமீபத்தில் விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிதளவில் வசூல் சாதனையை படைத்தது. இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 22ந் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லு படத்தை உலகமெங்கும் ஜூன் 21ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் ஆகும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளனர்.