உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன?

சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்கிற சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா நல்காரி. முன்னதாக கணவருக்காக சீதாராமன் தொடரிலிருந்து வெளியேறிய அவர், கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் நளதமயந்தி சீரியலில் கமிட்டானார். தற்போது கணவருடன் சமாதனம் ஏற்பட்டு அண்மையில் பிரியங்கா தனது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடினர்.

இதனிடையே நளதமயந்தி தொடரின் கதைக்களம் மாற்றப்பட்டு நடிகை ஸ்ரீநிதி இனி லீட் ரோலில் நடிக்க உள்ளார். தமயந்தி கதாபாத்திரத்தின் தங்கையாக ஸ்ரீநிதி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமயந்தி கதாபாத்திரமும் இனி தொடராதது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய புரோமோவை நடிகை ஸ்ரீநிதி தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் பிரியங்கா நல்காரி ஏன் சீரியலை விட்டு விலகினார் என்று கேட்டு வருகிறார்கள். இதை பார்த்து ஷாக்கான பிரியங்கா, ‛நான் சீரியலை விட்டு விலகவில்லை. லீவு தான் எடுத்திருக்கிறேன். அடுத்த ஷெட்யூலுக்காக காத்திருக்கும் போது இது எப்படி ஆனது என்று எனக்கே தெரியவில்லை. இதற்கெல்லாம் விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !