உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். பெண்ணியம், பெண்ணுரிமை குறித்து பேசும் இந்த தொடரில் தற்போது அதை அரசியல் தளத்தில் பேசும் பிரபலம் ஒருவர் நடிக்க வந்துள்ளார். சமூகத்தில் பெண்ணியம் குறித்து தொடர்ந்து பேசி வரும் எழுத்தாளரான கொற்றவை சமீப காலங்களில் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கொற்றவை, ‛‛பெண் விடுதலை சிந்தனையுடன் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் இணைவது மகிழ்ச்சி'' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !