வாய்ப்பு தேடும் பிரியா ஆனந்த்
ADDED : 525 days ago
'வாமணன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அக்மார்க் தமிழ் பொண்ணு. அதன்பிறகு 180, இங்கிலீஸ் விங்கிலீஸ், வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன், எல்கேஜி, ஆதித்யா வர்மா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக 'லியோ' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். பிரியா நடித்து முடித்துள்ள 'அந்தகன்' மற்றும் 'சுமோ' படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னட பட வாய்ப்புகளும் இல்லை. நடித்து முடித்த படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரியா ஆனந்த், தற்போது புதிதாக வாய்ப்பு தேட தொடங்கி உள்ளார். இதற்காக தனியாக புதிய மேனஜரை நியமித்துள்ள பிரியா புதிய போட்டோ ஷூட் நடத்தி அதனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.