சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யார் தெரியுமா...?
மலையாள நடிகர் பஹத் பாசில் தற்போது மலையாளத்தையும் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் மலையாளத்தில் நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் உடன் பஹத் பாசில் சிறுவனாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எண்பதுகளின் மத்தியில் மலையாள இயக்குனரும், பஹத் பாசிலின் தந்தையுமான பாசில் தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வந்தார். அப்படி சத்யராஜை வைத்து பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் படங்கள். அந்த சமயத்தில் சிறுவனாக இருந்த பஹத் பாசில் தந்தையின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த போது சத்யராஜூடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகிறது.