உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4'

2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4'

2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் நிறைவடைந்து ஐந்தாவது மாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே 80க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒரு படம் கூட வியாபார ரீதியாக வசூலைக் குவித்து லாபத்தைத் தந்த படங்களாக அமையவில்லை.

அதை கடந்த வாரம் மே 3ம் தேதி வெளிவந்த 'அரண்மனை 4' படம் மாற்றியமைத்துள்ளது. இப்படம் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி ஹீரோ யாரும் நடிக்காமல், எப்போதோ ஒரு முறை வந்து தமிழில் நடிக்கும் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம்.

கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கிராபிக்ஸ், கூடவே சுவாரசியம் என விடுமுறை காலத்தில் மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வந்த படமாக இப்படம் அமைந்தது. அடுத்து வர உள்ள படங்களும் இதே போல அமைந்தால் மட்டுமே நான்கு மாதமாக துவண்டு கிடந்த தமிழ்த் திரையுலகம் தழைக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !