உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை

'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தை முதலில் மது மந்தெனா, அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா மற்றும் பலர் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால், மது மந்தெனா, அல்லு அரவிந்த் இப்படத் தயாரிப்பிலிருந்து விலகிவிட்டனர்.

இந்நிலையில் மது மந்தெனா இப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதை வாங்குவதற்காக பிரைம் போகஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் முடிவு பெறாமல் உள்ளது. எனவே, தங்களது அனுமதி பெறாமல் இப்படம் குறித்த எதையும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தில் தன்னை இணை தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டார் கன்னட நடிகர் யஷ். படத்தில் இவர்தான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரும் நமித் மல்கோத்ரா இருவரும் இணைந்துதான் தற்போது படத்தைத் தயாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !