மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர்
ADDED : 520 days ago
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் தற்போது நடித்து வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு துபாய் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறைவில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, ஸ்ரீதேவி வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள மும்பை லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு (சவுக்) 'ஸ்ரீதேவி கபூர் சவுக்' என பெயரிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.