உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த கங்குவா படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சூர்யா. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதில், எப்போதும் போன்று உங்கள் சம்பவங்களை பண்ணுங்க அண்ணா. ஒரு டான்ஸ் மெட்டீரியல் பாடலும் வையுங்க என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சூர்யா 44 வது படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பல படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள போதும், சூர்யா படத்திற்கு இப்போதுதான் அவர் முதல் முறையாக இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !