ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்
ADDED : 550 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‛இந்திரா' சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் அக்ஷய் கமல், பவுசி, ஜீவி டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், காவியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜீவி டிம்பிள் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை தாட்சாயிணி நடிக்க ஆரம்பித்துள்ளார். காவியா கதாபாத்திரத்தில் தாட்சாயிணி அறிமுகமாகியுள்ள காட்சி அண்மையில் புரோமோவாக வெளியாகியுள்ளது.