உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு!

விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு!


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த நிலையில், தற்போது பத்திரிகை விளம்பரத்தின் மூலம் கட்சி நிர்வாகிகள் பெயர்களை அறிவித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகரன், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் பெயரில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தலாம் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !