மோகன் நடித்துள்ள ஹரா ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது!
ADDED : 512 days ago
1980களில் வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்தவர் மோகன். 90க்கு பிறகு உருவம், அன்புள்ள காதலுக்கு, சுட்ட பழம் என சில படங்களில் நடித்த மோகனுக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கி உள்ள இந்த படத்தில் மோகனுடன், சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், வருகிற ஜூன் 7ம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.