மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 526 days ago
துரை செந்தில்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூரி 'கருடன்' என்கிற முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும் பல காரணங்களால் இதன் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்தவாரம் மே மாதம் ரிலீஸ் என அறிவித்தனர். இந்த நிலையில் இன்று கருடன் திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.