மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
507 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
507 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
507 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
507 days ago
50 வருடங்களுக்கு முன்பு பிசியான தயாரிப்பாளர், கதாசிரியராக இருந்தவர் பஞ்சு அருணாசலம். அப்போது ஹிந்தி படங்கள் தமிழ்நாட்டில் தமிழ் படங்களை விட அதிகமாக ஓடியது. காரணம் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள். இதனால் பஞ்சு அருணாசலம் முழுக்க முழுக்க இசையை மூலதனமான கொண்டு ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் 'நர்ஸ் கோகிலா' என்ற ஒரு கிராமத்து கதை சொன்னார். அது பஞ்சு அருணாசலத்திற்கு பிடித்து விட்டது. சின்ன பட்ஜெட்டில் தயாரிக்க வேண்டும் என்பதால் அப்போதிருந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நிறைய சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் புதிய இசை அமைப்பாளரை தேடினார்.
அப்போது செல்வராஜ், ராஜா என்ற இளைஞரை அறிமுகப்படுத்தினார். “இவரு என்னோட நண்பன், ஜி.கே.வெங்கடேஸ்கிட்ட வேலை செய்றான். கை வசம் நிறைய பாட்டு வச்சிருக்கான்”னு அறிமுகப்படுத்தினார். பஞ்சு அருணாசலம், ராஜா சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்ட்டாரெண்டில் நடந்தது. சந்திக்க வந்த ராஜா ஆர்மோனிய பெட்டியை கொண்டு வரவில்லை.
“என்னப்பா மியூசிக் டைரக்டர்னா ஆர்மோனிய பெட்டி வேணாமா” என்று கோபப்பட்டார் பஞ்சு அருணாசலம். “அண்ணே அதை ரிப்பேருக்கு கொடுத்திருக்கேன். மேஜையில் தாளம் போட்டு காட்டுறேன்” என்று சொல்லி மேஜையிலேயே கையால் தாளமிட்டு 6 பாடல்களை மெட்டு போட்டு காட்டினார். அந்த 6 பாடல்களும் 'அன்னக்கிளி' படத்தில் இடம் பெற்றது. 'அன்னக்கிளி உன்னை தேடுதே...' பாடல் மிகவும் பிடித்து போனதால் அதையே படத்தின் தலைப்பாகவும் வைத்தார் பஞ்சு அருணாசலம்.
அப்போது ராஜா என்ற பெயரில் இன்னொரு இசை அமைப்பாளர் இருந்ததால் பஞ்சு அருணாசலம் 'இளையராஜா' என்று பெயர் சூட்டினார். அதன் பின் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தியாவின் தவிர்க்க முடியாத இசை ராஜாவாக உருவெடுத்தார் இளையராஜா. பஞ்சு அருணாசலம் - இளையராஜா கூட்டணியில் அன்னக்கிளி (1976) படம் வெளியான நாள் இன்று. அந்தவகையில் இளையராஜா சினிமாவுக்கு வந்து இன்றோடு 48 ஆண்டுகள் ஆகிறது.
507 days ago
507 days ago
507 days ago
507 days ago