விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை
ADDED : 543 days ago
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். இவரது மூத்த மகனான விஜய பிரபாகரன் அரசியலில் பயணித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் பயணித்து வருகிறார். விஜய பிரபாகரன் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு காலமும் நேரமும் கை கொடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.