ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4'
ADDED : 510 days ago
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 4. இதில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, கே .எஸ்.ரவிகுமார், கோவைசரளா, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் நல்ல வசூலை கொடுத்தது. இதுவரை 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் வெளியாவதாக அறிவிகப்பட்டு ஹிந்தி டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஹிந்தி சினிமாவுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களை முன்னிலைப்படுத்தி புரமோசன் செய்யப்பட்டு வருகிறது.