மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ADDED : 513 days ago
ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து திரைக்கு வந்த படம் ஜவான். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சுஜா கோஸ் என்பவர் இயக்கும் கிங் என்ற படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் ஷாரூக்கான். இப்படத்தில் ஷாரூக்கானின் மகள் சுஹானா கானும் ஒரு முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார். மேலும் ஜவான் படத்தை அடுத்து இந்த கிங் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். அதையடுத்து மும்பை சென்று அவர் கம்போஸிங் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.