மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
479 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
479 days ago
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே கடந்த மாதம் 25ம் தேதி ஆரம்பமானது. மேலூர், கல்லம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 25 நாட்களாக நடந்து வந்த முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஆலங்குளம் ஊரில் உள்ள காய்கறி மார்க்கெட் ஒன்றில் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்காக சென்ற வீடியோ ஒன்றை விக்ரம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். கூடியுள்ள ரசிகர்கள் கூட்டம் விக்ரமிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது. அவர்களுக்கு கையசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார் விக்ரம்.
“உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை… முதல் கட்டப் படப்பிடிப்பு பேக்-அப் ஆனது,” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்திப் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது. ஆனால், வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள். அப்படம் வெளிவருவதற்குள் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பையே முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.
479 days ago
479 days ago