மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார்
ADDED : 513 days ago
கடந்த 2015ம் ஆண்டு எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தயாரிக்க, ராபர்ட் மாஸ்டர் இயக்கியிருந்தார். அதோடு அவர்கள் அப்படத்தில் நடித்தும் இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பங்கேற்றார்கள். இந்த நிலையில் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்தில் ராபர்ட் மாஸ்டரும், வனிதா விஜயகுமாரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அவர்களுடன் ஸ்ரீகாந்த், ஷகிலா, பிரேம்ஜி, சுனில் உள்ளிட்டவர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் தயாரிப்பு துறையில் பணியாற்றுகிறாராம்.