புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா
ADDED : 512 days ago
தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் வித்யாசாகர் இறந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் மீனா. தற்போது தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரி போன்ற படங்களில் நடித்து வரும் அவர், சென்னையில் கோடை வெயில் வறுத்தெடுப்பதால், ஐஸ்லாந்து நாட்டிற்கு குளுகுளு சுற்று பயணம் சென்றிருக்கிறார். அங்குள்ள எழில் கொஞ்சும் பகுதிகளை பார்த்து ரசித்த மீனா, புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பாடலுக்கும் உற்சாக நடனம் ஆடி ரீலீஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். அது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.