உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன்

உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன்

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் 'ராயன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அல்லாமல் தான் புதிதாக இயக்கி வரும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் பிரபல பாடகரான அந்தோனி தாசன், தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் உடன் புதிய போட்டோ ஒன்றைக் பகிர்ந்து உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு என பதிவிட்டுள்ளார்.

இதனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !