5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம்
ADDED : 501 days ago
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்து கடந்த வருடத்தில் வெளிவந்த படம் 'பார்கிங்'. கார் பார்க்கிங் பிரச்னையை வைத்து வெளியான இந்தபடம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போது இந்த படத்தை பிற மொழிகளில் ரீ-மேக் செய்ய விற்பனையாகி உள்ளதாம். அந்தவகையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஒரு வெளிநாட்டு மொழி என 5 மொழிகளில் ரீமேக் உரிமம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.