டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி
ADDED : 502 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கொட்டுக்காளி' . இதனை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி உள்ளார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உணர்வுப்பூர்வமான கதைகளத்தில் வித்தியாசமான படமாக தயாராகி உள்ளது.
ஏற்கனவே 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை திரையிட்டனர். இந்த நிலையில் இப்போது 2024ம் வருடத்திற்காக டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.