உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு

விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. ஆனால், சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுத்து வருகிறார். அவருடைய பழைய திறமையை தற்போது பார்க்க முடிவதில்லை.

தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை, ராம் கோபால் வர்மா சந்தித்துள்ளார். அந்த சந்திப்புக்குப் பின், “அவரை திரையில் பல முறை பார்த்ததற்குப் பிறகு, கடைசியாக நிஜ விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தேன். அவர் திரையில் இருப்பதை விட நேரில் நல்லவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

சென்னையில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராம்கோபால் வர்மா, விஜய் சேதுபதியை நேரில் வந்து சந்தித்துள்ளது ஆச்சரியமான ஒன்று. இருவரும் இணைந்து புதிய படம் எதையும் செய்யப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !