உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன்

சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன்

சினிமா ஸ்டார்கள் என்றாலே ஸ்டார் ஓட்டல்களில் மட்டும்தான் சாப்பிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு சிலர் மட்டும்தான் ஸ்டார் அந்தஸ்தை விட்டுவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ஒரு சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது. சமீபத்தில் நந்தியால் சென்று தனது நண்பருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லு அர்ஜுன். அதை முடித்து ஐதராபாத் திரும்பும் வழியில் ஒரு சாதாரண ஹோட்டலில் அவரும், அவரது மனைவி ஸ்னேகாவும் சாப்பிட்ட புகைப்படம் நேற்று வெளியானது.

இத்தனை கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஸ்டார் ஓட்டலைத் தேடிப் போகாமல், சாதாரண ஓட்டலில் சாப்பிட்டதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அல்லு அர்ஜுன் மிகவும் எளிமையானவர் என அவர்கள் புகழ்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !