தனியார் தீவிற்கு ஹனிமூன் சென்ற ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 554 days ago
'அயலான், இந்தியன் 2' பட கதாநாயகியான ரகுல் ப்ரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் ஜாக்கி பக்னானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். தீவுகள் நிறைந்த நாடான பிஜியில் உள்ள தனியார் தீவு ஒன்றில் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து சில கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
“வானம் ஆன்மாவை சந்திக்கும் இடம். ஜாக்கி பக்னானி சிறந்த போட்டோகிராபராக மாறிய போது,” என அவர் கணவர் எடுத்த புகைப்படங்களைப் பாராட்டியுள்ளார்.
ரகுல் ப்ரீத் நடித்து அடுத்து தமிழில் 'இந்தியன் 2' படம் வெளியாக உள்ளது. இசை வெளியீட்டிற்கு ரகுல் வருவார் என எதிர்பார்க்கலாம்.