நீட் தேர்வு பின்னணியில் உருவாகி உள்ள அஞ்சாமை
ADDED : 538 days ago
கல்வித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் நீட் தேர்வு. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தால் அனிதா உள்ளிட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
நீட் பிரச்னையை வைத்து உருவாகி உள்ள புதிய படம் 'அஞ்சாமை'. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராகவ் பிரசாத் இசை அமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.