அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக்
ADDED : 548 days ago
சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சோஷியல் மீடியாக்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும் தைரியமாக கருத்துகள் கூறி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவரை பற்றி நெட்டீசன்கள் பலர் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், ரேகா நாயர் ஏற்கனவே திருமணமான எம்.எல்.ஏவை தற்போது இரண்டாம் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரேகா நாயர், 'எம்.எல்.ஏ வின் அப்பாவை எனக்கு தெரியும். நாங்கள் ஒன்றாக மாரத்தான் ஓடுவோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவர் குடும்பத்தில் அனைவருமே எனக்கு நண்பர்கள். வதந்திகளில் வெளியாவது போல் எம்.எல்.ஏவுக்கும் எனக்கு திருமணமாகிவிட்டதா என்றால் அதை போய் அவரிடமே கேளுங்கள்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.