மெட்ரோ கூட்டணியில் உருவாகும் ‛நான் வைலன்ஸ்'
ADDED : 506 days ago
கடந்த 2016ம் ஆண்டில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிரிஷ் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'மெட்ரோ'. வித்தியாசமான கதை களத்தை மையப்படுத்தி வெளியான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. இப்போது 8 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் மெட்ரோ பட கூட்டணி இணைந்துள்ளதாக அறிவித்தனர். ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிர்ஷ், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு 'நான் வைலன்ஸ்' என தலைப்பு வைத்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிரைம் கலந்த திரில்லர் கதையில் தயாராகிறது.