உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4'

2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4'


2024ம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கம் நடிப்பில், கதாநாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்க இப்படம் இந்த மாதம் 3ம் தேதி வெளியானது. இரு தினங்களுக்கு முன்பு இப்படம் 25வது நாளைத் தொட்டது. கடந்த வாரம் 100 கோடி வசூலையும் கடந்தது. அதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இந்த வருடம் வெளிவந்த படங்களில் 25 நாட்களைக் கடந்த படங்களாக “அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன்,” ஆகியவை அமைந்தன. அந்த வரிசையில் தற்போது 'அரண்மனை 4' படமும் சேர்ந்துள்ளது. முந்தைய 25 நாள் படங்கள் அத்தனை நாட்கள் ஓடினாலும் லாபம் தராத படங்களாகவே இருந்தன. 'அரண்மனை 4' மட்டும்தான் லாபத்தையும் தந்த படமாக அமைந்தது.

'அரண்மனை 4' படம் வெற்றி பெற்றதால் இயக்குனர் சுந்தர் சி 'அரண்மனை 5' படத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் தமிழில் முதல் முறையாக உருவாகும் 5ம் பாகப் படம் என்ற பெருமையைப் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !