மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது!
ADDED : 510 days ago
1980- 90களில் சில்வர் ஜூப்ளி நாயகனாக திகழ்ந்தவர் மோகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் ‛ஹரா'. விஜய் ஸ்ரீ இயக்கி உள்ள இந்த படத்தில் மோகனுடன் இணைந்து அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் 7ம் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் வேடத்தில் மோகன் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் தற்போது 93 வயதாகும் நடிகர் சாருஹாசன், கமலின் நாயகன் படத்தில் இடம்பெற்ற வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.