உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை

மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை


தற்போது ‛கோட்' படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்து 69வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய், தனது பிறந்த நாளின்போது மதுரையில் முதல் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். அந்த அறிக்கையில், ‛தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினமான வரும் மே 28ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !