உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன்' ஜுன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் : இன்று புதிய டிரைலர் வெளியீடு

'இந்தியன்' ஜுன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் : இன்று புதிய டிரைலர் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இயக்கத்தில், கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் 1996ல் வெளிவந்த படம் 'இந்தியன்'. சூப்பர் ஹிட்டாக ஓடி பெரும் வசூலைக் குவித்தது. இப்படத்தை ஏஎம் ரத்தினத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்தது.

ஆனால், படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்க கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது.

இரண்டாம் பாகம் வருவதை முன்னிட்டு முன்னதாக படத்தின் முதல் பாகமான 'இந்தியன்' படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் முடிவு செய்துள்ளார். ஜுன் 7ம் தேதி இப்படத்தை தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளார்கள். அதற்கான புதிய டிரைலர் இன்று வெளியாக உள்ளது.

சமீப காலமாக ரீ-ரிலீஸ் ஆகும் சில படங்கள் நல்ல வசூலைக் குவிக்கிறது. 'கில்லி' படத்திற்குப் பிறகு 'இந்தியன்' படமும் நல்ல வசூலைத் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !