உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்ட் கார்டா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்ட் கார்டா? அதிர்ச்சியில் ரசிகர்கள்


'எதிர்நீச்சல்' தொடர் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. கோலங்கள் சீரியலுக்கு பின் இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக ஆதரவை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொடரின் கதை தடுமாற்றத்தை சந்தித்தது. இப்போது வரை பழைய ஸ்பீடை தொடமுடியாமல் டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரானது மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக இணையதளங்களில் வெளியாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !