மூன்றாவது முறையாக அப்பாவாகப் போகும் சிவகார்த்திகேயன்!
ADDED : 529 days ago
அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்களில் அவர் நடிக்கப் போகிறார். மேலும், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு விழாவுக்கு மனைவியுடன் சிவகார்த்திகேயன் வந்திருந்தபோது இது குறித்த தகவல்கள் வெளியானது. அதையடுத்து மீண்டும் அப்பாவாகப் போகும் சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.