அனுபமா பரமேஸ்வரனின் ‛லாக் டவுன்' ஜூன் மாதம் வெளியாகிறது
ADDED : 505 days ago
தமிழில் கொடி, தள்ளிப் போகாதே என சில படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ஜீவன் என்பவர் இயக்கியுள்ள லாக்டவுன் என்ற படத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்து முடித்திருக்கிறார். தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருப்பதாக லைகா நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் போஸ்டருடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த லாக் டவுன் படத்துக்கு என்.ஆர்.ரகுநாதன் - சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.