உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மமிதா பைஜுவை மிரள வைத்த சென்னை ரசிகர்கள்

மமிதா பைஜுவை மிரள வைத்த சென்னை ரசிகர்கள்

தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. அந்தப் படம் இங்கு சரியாக ஓடவுமில்லை. ஆனாலும், 'பிரேமலு' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து மமிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

இன்றைய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் மமிதா. நேற்று சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக அந்த மாலுக்குள் வந்த மமிதாவை சென்னை ரசிகர்கள் மிரள வைத்துவிட்டார்கள்.

அவரைப் பார்க்க அதிக கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் மமிதாவை நெருங்கியது கூட்டம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரை கடைக்குள் அழைத்து வந்து கடையைத் திறந்துவிட்டனர். ஒரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழையில் மமிதா நனைந்தாலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்.

தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்தால் நயன்தாராவின் இடத்தை எளிதில் பிடித்துவிடுவார் மமிதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !