உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிகட்ட படப்பிடிப்பில் குபேரா

இறுதிகட்ட படப்பிடிப்பில் குபேரா

தனுஷின் 51வது படமான 'குபேரா'-வை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தொடர்நது மும்பை, பாங்காக் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள குபேரா பட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இப்போது தனுஷ், நாகார்ஜூனா சம்மந்தப்பட்ட சண்டை காட்சிகள் படமாகி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !