உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா

ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா

தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி நாயகன் பாலகிருஷ்ணா. மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான என்டிஆர் மகன். அவரது அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்கு தேசக் கட்சியில் இருக்கிறார்.

தற்போது நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் சுமார் 32 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.

தெலுங்கு தேசக் கட்சி சார்பா 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2019ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

1985 முதல் 1994 வரையில் அவரது அப்பா என்டிஆர் அதே தொகுதியில் நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். தனது அப்பாவின் சாதனையைத் தற்போது சமன் செய்துள்ளார் பாலகிருஷ்ணா. 1996ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பாலகிருஷ்ணாவின் சகோதரர் ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றிருந்தார்.

1985ம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !