உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுன்ட் டவுனை துவங்கிய புஷ்பா 2

கவுன்ட் டவுனை துவங்கிய புஷ்பா 2

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுனின் மாஸ் நடிப்பு, போலீஸ் அதிகாரியான பஹத் பாசிலின் வில்லத்தனம், ராஷ்மிகா மற்றும் சமந்தாவின் அதிரி புதிரியான நடனங்கள், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை என இந்த படத்தின் வெற்றிக்கு பல அம்சங்கள் பக்க பலமாக இருந்தன.

இரண்டு பாகங்களாக தயாரான இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு 75 நாட்கள் இருக்கும் நிலையில் புஷ்பா 2 படக்குழுவினர் இதுகுறித்து கவுன்டவுன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !