ரஜினியின் ஜெயிலர் - 2 படத்தில் இணையும் பாலகிருஷ்ணா
ADDED : 498 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர். 600 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு கூலி படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும் ரஜினி, அதையடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற பிறமொழி சினிமா பிரபலங்கள் நடித்த நிலையில் ஜெயிலர்- 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.