உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐந்து நாட்களில் 26 கோடி வசூலித்த சூரியின் கருடன்

ஐந்து நாட்களில் 26 கோடி வசூலித்த சூரியின் கருடன்

விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி, அதையடுத்து தற்போது கருடன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 31ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது கருடன் படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் இன்னும் பெரிய அளவில் வசூலித்து சூரியின் ஹீரோ மார்க்கெட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !