உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் 20ல் மீண்டும் தொடங்குகிறது!

அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் 20ல் மீண்டும் தொடங்குகிறது!


மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வந்த ‛விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சில மாதங்கள் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‛குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித்குமார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் (ஜூன் 7ம் தேதி) முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்து ஜூன் 20ம் தேதி முதல் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் குமார் கலந்து கொள்ளவிருக்கிறார். அஜர்பைஜானில் 40 நாட்கள் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா நடிக்கும் காட்சிகள் மற்றும் ஆக்சன், பாடல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. அதன் பிறகு ஜப்பான் நாட்டில் நடைபெறும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அஜித்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !