உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாற்பது வருடத்திற்கு பிறகு ரீ-யூனியன்! மகிழ்ச்சியில் அம்பிகா

நாற்பது வருடத்திற்கு பிறகு ரீ-யூனியன்! மகிழ்ச்சியில் அம்பிகா


வெள்ளித்திரையில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் மாமியார், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகைகளான அம்பிகா, நளினி, பூர்ணிமா ஆகியோர் ஒரே தொடரில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். புதிதாக ஒளிபரப்பாகும் ‛மல்லி' தொடரில் தான் இந்த சீனியர் நடிகைகள் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.

இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்துள்ள அம்பிகா, '1983 காலக்கட்டத்தில் பூர்ணிமாவுடன் மலையாள படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன்பிறகு 1986ல் நளினியுடன் கன்னட படத்தில் நடித்தேன். தற்போது 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஸ்கூல் ரீயூனியன் போல் உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !