கமல்ஹாசன் ரசிகர்கள் செய்த பால் அபிஷேகம் : எப்ப தான் மாறுவார்களோ
ADDED : 485 days ago
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படம் இன்று மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. இன்று காலை சென்னையில் நடைபெற்ற முதல் நாள் காட்சியில் கமல்ஹாசன் பேனருக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்துள்ளனர். அதில் நடிகர் ரோபோ சங்கரும் கலந்து கொண்டார்.
கட் அவுட்டுகள், பேனர்கள் ஆகியவற்றிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அதனால், மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அதை ஏறக்குறைய குறைத்துவிட்டனர். தன்னை எப்போதும் சமக அக்கறை உள்ளவனாகப் பேசும் கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று இப்படி பால் அபிஷேகம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சொன்னாலும் சில ஆர்வக் கோளாறுகள் கேட்கவே மாட்டார்கள். அதற்கு இன்று நடந்த சம்பவம் மற்றுமொரு உதாரணம்.