புதுமுகங்கள் உருவாக்கும் ஹாரர் திரில்லர் படம்
ADDED : 566 days ago
அறம் புரொடக்ஷன் சார்பில் ராமலிங்கம் தயாரித்துள்ள படம் 'பி&2'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ளார். கன்னடம், தெலுங்கு உட்பட 10கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் அறிமுகமாகிறார். சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா நடித்துள்ளனார். தேவா இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். தமிழில் இப்படியான படங்கள் மிகவும் குறைவு. வித்தியாசமான கதை களத்தில் இந்த படத்தின் கதை சொல்லப்படுகிறது. ஹாலிவுட் படங்கள் போன்று அல்லாமல் நமது சமூகத்துக்கு ஏற்ற மாதிரியான நம் மண்ணோடு தொடர்புடைய ஒரு படமாக உருவாகி உள்ளது” என்கிறார் இயக்குனர் சிவம்.