மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
454 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
454 days ago
பெங்களூரு அருகே ஒரு பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் வெளிநாட்டு போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வந்தது. போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டதும், தெலுங்கு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதும் தெரிய வந்தது.
இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததே தெலுங்கு நடிகை ஹேமா என்ற தகவல் வெளியானது. இவர் 250க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ் மகன், சத்யம், சாகசம், தேவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஹேமாவும் விருந்தில் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து ஹேமா நீக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் மஞ்சு கூறுகையில், “ஹேமா போதை பொருள் எடுத்துக் கொண்டது உறுதியானதால், அவரை நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிமாக நீக்கி உள்ளோம். ஒருவேளை அவர் நிரபராதி என்று தெரிய வந்தால் அதன்பிறகு அவரை நீக்கிய முடிவை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். வழக்கு சம்பந்தமான விவரங்களை கொடுக்கும்படி ஹேமாவிடம் கோரியபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்றார்.
454 days ago
454 days ago