உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகைகளுக்குள் போட்டி நல்லதே : தமன்னா

நடிகைகளுக்குள் போட்டி நல்லதே : தமன்னா

சுந்தர் சி இயக்கம், நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‛அரண்மனை 4'. தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம் வரவேற்பை பெற்றதோடு ரூ.100 கோடி வசூலையும் அள்ளியது. இந்த படத்தில் இரு நாயகிகள் என்பதால் படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛பொதுவாகவே ஒரு படத்தில் இரு நாயகிகள் என்றால் இதுபோன்று ஒப்பிட்டு பேசுவதும், போட்டி என்று கூறுவதும் வழக்கமே. என்னை பொறுத்தமட்டில் நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம் இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். போட்டியிருந்தாலும் நாம் நாமாகவே நடித்தால் போதுமானது. அரண்மனை 4 படத்தில் வரும் அச்சோ அச்சோ பாடலில் நானும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டு ஆடினாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம். இது போன்ற ஆரோக்கியமான போட்டியிருந்தால் நல்லது'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !