பேபி கம் டவுன்- வயிற்றை பிடித்துக் கொண்டு அதிரடி ஆட்டம் போட்ட அமலாபால்!
ADDED : 530 days ago
கடந்த ஆண்டு தனது காதலர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், சில மாதங்களில் கர்ப்பமானவர். அதன் பிறகு தான் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அதோடு, தான் கர்ப்பமானதிலிருந்து அவ்வபோது போட்டோசூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அமலாபாலுக்கு, இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது.
என்றாலும், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது வயிற்றை கையில் பிடித்துக் கொண்டு அதிரடியாக நடனமாடும் ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவின் பின்னணியில் பேபி கம் டவுன் என்ற பாடல் ஒலிக்கிறது.